
தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் கணவர் கர்நாடக தேர்தலில் பிற கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (மே.13) எண்ணப்பட்டது. இதில் கர்நாடக சபாநாயகர், முக்கிய அமைச்சர்கள் எனப் பலரும் தோல்வி அடைந்தனர். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக மீதே அனைவரது கவனமும் இருக்கும் நிலையில், அங்கே தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரியின் கணவரும் வெற்றி பெற்றிருக்கிறார். மதுரையை சேர்ந்தவர் அமுதா. இவர் தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக இருந்தவர். ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் அலுவலகத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றி பின்னர் தமிழகம் திரும்பினார்.
இதையும் படிங்க: சிபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநராக பிரவீன் சூத் நியமனம்
இதனிடையே அமுதாவின் கணவர் ஷம்பு கலோலிகர். 58 வயதான இவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ரெய்பேக் ஒன்றியத்தில் உள்ள யபரட்டி என்ற ஊரை சேர்ந்தவர். 1991 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தமிழக கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் இணைச் செயலாளராக இருந்து, சமீபத்தில் தான் விருப்ப ஓய்வைப் பெற்றிருந்தார். ஓய்வு பெறும் முன்பு 30 ஆண்டுகள் ஐஏஎஸ் அகிராரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். ஆட்சிப் பணிக்கு வரும் முன், மத்திய பெட்ரோலியம் துறையின் இயக்குநராகவும் இருந்துள்ளார். தனது சொந்த ஊரில் மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதை அறிந்த அவர், தனது தேவையான வசதிகளைச் செய்ய முடிவு செய்தார். கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அவர் 2022 இறுதியில் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸை சேர்ந்தவர்களாக அறியப்படுகின்றனர்.
இதையும் படிங்க: மோடி அலை ஓய்ந்துவிட்டது.. 2024 தேர்தலில் பாஜகவை விரட்டுவோம் - சிவசேனாவின் முன்னணி தலைவர் சஞ்சய் ராவத்
இவருடைய உறவினர்களும் அரசியல் சார்ந்த பதவிகளில் இருந்துள்ளனர். ஷம்பு கலோலிகர் காங்கிரஸ் சார்பிலேயே முதலில் ரெய்பேக் போட்டியிட விரும்பியதாகத் தெரிகிறது. இருப்பினும், அங்கே அவருக்குப் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்தார். அதன்படி சுயேச்சையாக இறங்கிய ஷம்பு கலோலிகர் தனது தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு மக்களிடையே மிகப் பெரியளவில் ஆதரவு கிடைத்தது. இதனிடையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதில் ஷம்பு கல்லோலிகர் 57400 வாக்குகளைப் பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஐஹோலே துரியோதன் மகாலிங்கப்பா 57100 வாக்குகளைப் பெற்ற நிலையில் இவர் 57,400 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் மஜத வேட்பாளர்கள் கூட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.