மோடி அலை ஓய்ந்துவிட்டது.. 2024 தேர்தலில் பாஜகவை விரட்டுவோம் - சிவசேனாவின் முன்னணி தலைவர் சஞ்சய் ராவத்

By Raghupati R  |  First Published May 14, 2023, 5:42 PM IST

காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது அப்படியென்றால் கடவுள் அனுமன் காங்கிரசுடன் உள்ளார் பாஜகவுடன் இல்லை என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார் சஞ்சய் ராவத்.


கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ள அதே சமயத்தில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதங்களும் தொடங்கி விட்டன. 

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய இருவருமே தத்தமது தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இரு தலைவர்களின் தொண்டர்களும் தங்களது தலைவர்களை முதலமைச்சராக்க வேண்டும் என பரஸ்பரம் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Latest Videos

undefined

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்துமகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் முன்னணி தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சர்வாதிகாரத்தை மக்களால் முறியடிக்க முடியும் என்பதை கர்நாடகா நிரூபித்துள்ளது.

காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது அப்படியென்றால் கடவுள் அனுமன் காங்கிரசுடன் உள்ளார் பாஜகவுடன் இல்லை என்பதை காட்டுகிறது. பாஜக தோல்வியடைந்தால் வன்முறை வெடிக்கும் என்று நமது உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கர்நாடகா அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்கு வன்முறை நடைபெறுகிறது ?

பிரதமர் மோடி அலை ஓய்ந்து இப்போது நாடு முழுவதும் எங்கள் அலை வந்து கொண்டிருக்கிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தம் தொடங்கிவிட்டது. சரத் பவார் தலைமையில் இன்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2024 தேர்தல் குறித்து விவாதித்து அதற்கான ஆயத்தத்தைத் தொடங்குவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

click me!