’முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறை - வருகிறது புதுசட்டம்..!

Asianet News Tamil  
Published : Dec 01, 2017, 09:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
’முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறை - வருகிறது புதுசட்டம்..!

சுருக்கம்

The law has been prepared to imprison three years of imprisonment for husbands who have been accused of murder.

முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் 3 முறை ‘தலாக்’ கூறினால் போதும். அவர்களுக்குள் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம். இந்த வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. 

இதை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முத்தலாக் நடைமுறை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, வருகிற குளிர்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’குக்கு தடை விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இப்போது முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டவரைவு தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!