கார்கில் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது ராணுவத்தினரின் அசாதாரண வீரத்தின் அடையாளம். தாய்நாட்டைக் காக்க தங்களின் இன்னுயிரை மண்ணுக்காக நீத்த வீரர்களை எப்போதும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்.
கார்கில் போரில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது ராணுவத்தினரின் அசாதாரண வீரத்தின் அடையாளம். தாய்நாட்டைக் காக்க தங்களின் இன்னுயிரை மண்ணுக்காக நீத்த வீரர்களை எப்போதும் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்தது. மே மாதம் தொடங்கிய போர் ஜூலை வரை நீடித்தது. இந்தப் போரில் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அதிகாரிகள் உயிரிழந்தனர். 1999, ஜூலை 26ம்தேதி கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக ராணுவம் அறிவித்தது.
அதிகரிக்கும் திருப்பதி உண்டியல் வருவாய்… ரூ.1500 கோடியை எட்டும் என தேவஸ்தானம் தகவல்!!
இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம்தேதி கார்கில் போரில் இன்னுயிரை நீத்து நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, அந்தப் போரில் பங்கேற்ற வீரர்களை இந்நாளில்நினைவுகூர்ந்து கவுரப்படுத்துவதை அரசு செய்து வருகிறது.
பிஹார்கூட இல்லை, தமிழகம்தான் மோசமாம்! எஸ்சி,எஸ்டிக்கு எதிராக வன்முறை குறித்து மத்திய அரசு தகவல்
23-வது ஆண்டு கார்கில் வெற்றி தினத்தை லடாக்கில் உள்ள இந்திய மக்கள், ராணுவத்தினருடன் இணைந்து கொண்டாடி வருகிறார்கள். லடாக்கில் மாணவர்கள் கார்கில் வெற்றியைக் கொண்டாடும்வகையில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். 24க்கும் மேற்பட்ட ஓவியங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அடேங்கப்பா! இதுதான்யா மோசடி: ஆளுநர், எம்.பி. பதவி வாங்கித் தருவதாக ரூ.100 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது
கார்கில் போர் வெற்றி நாள் குறித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ கார்கில் வெற்றி என்பது, அசாதாரண வீரம், துணிச்சல், நம்முடைய ராணுவத்தினரின் தீர்மானம் ஆகியவற்றின் அடையாளம். தாய்நாட்டைக் காக்க கார்கில் போரில் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்காக நான் வணங்குகிறேன். கார்கில் போரில் தேசத்துக்காகஉயிர் நீத்த வீரர்களையும், அவர்களின் குடும்பங்களையும் மக்களும், தேசமும் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் “ எனத் தெரிவித்துள்ளார்.