முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தவறுதலாக கீழே விட்ட கைக்குட்டையை சற்றும் தாமதிக்காமல் கீழே குனிந்து பிரதமர் மோடி எடுத்துக்கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தவறுதலாக கீழே விட்ட கைக்குட்டையை சற்றும் தாமதிக்காமல் கீழே குனிந்து பிரதமர் மோடி எடுத்துக்கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
நாட்டின் 15-வது குடியரசுத் திரெளபதி முர்மு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா , முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2வது பெண் குடியரசுத் தலைவர், மிக குறைந்த வயது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை முர்மு பெற்றார்.
இதையும் படிங்க;- சீனாவில் இருந்து வந்த மெசேஜ்.. அதிர்ச்சியான ஜனாதிபதி திரௌபதி முர்மு - என்ன தெரியுமா?
இந்நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் வயது மூப்பு காரணமாக பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் பிரதீபா பாட்டீலுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்போது, விழாவுக்கு வந்த பிரதமர் மோடி பிரதீபா பாட்டீலுக்கு வணக்கம் தெரிவித்து அருகில் அமர்ந்து கொண்டு உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர், விழா மேடையில் அனைவரும் எழுந்து நிற்கும் போது பாட்டீல் தனது வெள்ளை நிறக் கைக்குட்டையைக் தவறுதலாக கீழே விட்டார். அதை சற்றும் தாமதிக்கமால் கீழே குனிந்து பிரதமர் மோடி எடுத்து கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- Droupadi Murmu: ஜனாதிபதி திரெளபதி முர்முவின் சோகம் நிறைந்த தனிப்பட்ட வாழ்க்கை
பிரதிபா தேவிசிங் பாட்டீல் இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி 2007 முதல் ஜூலை 25 2012 வரை பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.