அதிகரிக்கும் திருப்பதி உண்டியல் வருவாய்… ரூ.1500 கோடியை எட்டும் என தேவஸ்தானம் தகவல்!!

By Narendran S  |  First Published Jul 25, 2022, 7:30 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் 1500 கோடி ரூபாயை எட்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருவாய் 1500 கோடி ரூபாயை எட்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா சற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பிஹார்கூட இல்லை, தமிழகம்தான் மோசமாம்! எஸ்சி,எஸ்டிக்கு எதிராக வன்முறை குறித்து மத்திய அரசு தகவல்

Tap to resize

Latest Videos

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை வைப்பதோடு உண்டியலில் காணிக்கையும் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து உண்டியல் வருவாயும் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.129.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி, ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

இதையும் படிங்க: மக்களவையில் அமளி… ஜோதிமணி உள்பட 4 பேர் சஸ்பெண்ட்… அவைத் தலைவர் அதிரடி!!

இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் உண்டியல் வருவாய் ரூ.1500 கோடியை எட்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை என அவைகள் மூலமாகவும் ஒரு தனி வருவாய் வருதாக கூறப்படுகிறது. இதனிடையே திருப்பதியில் நேற்று 80,815 பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 31,562 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் ரூ.4.82 கோடி உண்டியல் வருவாய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!