மக்களவையில் அமளி… ஜோதிமணி உள்பட 4 பேர் சஸ்பெண்ட்… அவைத் தலைவர் அதிரடி!!

By Narendran S  |  First Published Jul 25, 2022, 5:27 PM IST

காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். 


காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. அதில் பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியது.

இதையும் படிங்க: அடேங்கப்பா! இதுதான்யா மோசடி: ஆளுநர், எம்.பி. பதவி வாங்கித் தருவதாக ரூ.100 கோடி ஏமாற்றிய 4 பேர் கைது

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், இன்று மக்களவை மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும் பதாகைகளுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சீனாவில் இருந்து வந்த மெசேஜ்.. அதிர்ச்சியான ஜனாதிபதி திரௌபதி முர்மு - என்ன தெரியுமா?

அவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

click me!