மேற்குவங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கைதுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை இரவு மூன்று முறை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
3 முறை போன் செய்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி; மம்தாவின் பதில் இதுதான்!!மேற்குவங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கைதுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை இரவு மூன்று முறை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
மேற்குவங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் கைது அந்த மாநிலத்தை மட்டுமின்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவருக்கு நெருக்கமான உதவியாளரும், கூட்டாளியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜிக்கு அமைச்சர் வழங்கிய ஃபிளாட்டில் இருந்து ரூ. 20 கோடி ரொக்கப் பணம், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை சனிக்கிழமை அதிகாலை1.55 மணிக்கு அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவருக்கு அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் 'கைது மெமோ' கொடுத்தனர். இதன்படி உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் போன் செய்து கைது விஷயத்தை தெரிவிக்கலாம்.
நாய்க்கு தனி ஏசி ஃபிளாட்; நடிகை அர்பிதாவுக்கு தனி ஃபிளாட்; மேற்குவங்க அமைச்சரின் லீலைகள் அம்பலம்!!
அப்படி வழங்கப்பட்ட மெமோவில் அதிகாலை 2.33 மணிக்கு மம்தா பானர்ஜியை அழைத்துள்ளார். ஆனால், அவர் போன் எடுக்கவில்லை. தொடர்ந்து அதிகாலை 3.37 மற்றும் 9.35 மணிக்கு என்று போன் செய்துள்ளார். அப்போதும், மம்தா இவரது போனை எடுக்கவில்லை.
மூன்று முறையும் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் போனை மம்தா பானர்ஜி தவிர்த்து இருப்பதான் மூலம், இந்த விஷயத்தில் ஒதுங்கி இருக்க முடிவு செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் கைது மெமோவில் பதிவாகி இருக்கிறது. ஆனால், இதையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்து இருக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஃபிர்ஹத் ஹக்கீம் கூறுகையில், மம்தா பானர்ஜியை கைது செய்யப்பட்ட அமைச்சர் போனில் அழைத்தார் என்ற கேள்விக்கே இடமில்லை. பார்த்தாவின் போன் அமலாக்கத்துறையிடம் இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக துணை தலைவர் விடுதியில் விபச்சாரம்...! அடைத்துவைக்கப்பட்ட சிறுமிகளை அதிரடியாக மீட்ட போலீசார்..
கல்வித்துறை அமைச்சராக பார்த்தா இருந்தபோது, ஆசிரியர் பணி நியமனம் வழக்குவதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பது கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பணம் கையாடல் நடந்திருக்கும் குற்றச்சாட்டின் கீழ்தான் தற்போது பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவுடன் தனக்கு அசவுகரியமாக இருப்பதாக பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். இதையடுத்து அவரை கொல்கத்தாவில் இருக்கும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சேர்த்தனர். இது அரசு மருத்துவமனை என்பதால், அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுவார் என்பதால், வேறு மாநில மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது. இதையடுத்து, புவனேஸ்வரில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு விமானத்தின் மூலம் இன்று காலை கொண்டு செல்லப்பட்டார்.
அமலாக்கத்துறை விசாரணையின் உண்மை தன்மையை அறிந்த பின்னரே அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.