நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெறுகிறார் திரௌபதி முர்மு.
நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுள்ளார். ஒடிசாவில் உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்து கவுன்சிலராக வாழ்க்கையைத் தொடங்கி எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர் எனப் படிப்படியாக உயர்ந்து தற்போது நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுள்ளார்.
undefined
தேர்தலில் 64 சதவீத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முர்மு, நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெறுகிறார். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆகிய பெருமைகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘சீனாவும், இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள் ஆகும். ஆரோக்கியமான மற்றும் நிலையான சீனா - இந்தியா உறவு இரு நாடுகளின் அடிப்படை நலன்கள் மற்றும் அவர்களின் மக்களின் அடிப்படை நலன்களுக்கு ஏற்ப உள்ளது.
சீன - இந்திய உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தான் கொடுப்பதாகவும், அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், வேறுபாடுகளை சரியாகக் கையாளவும், இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் முன்னோக்கி நகர்த்தவும் முர்முவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு எடப்பாடி தான் சரி.. ஆனா எதிர்க்கட்சி பாஜக..! குண்டை தூக்கிப்போட்ட சி.டி ரவி