கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் துடிதுடித்து பலி.. 20 பேர் கவலைக்கிடம்..!

By vinoth kumar  |  First Published Jul 26, 2022, 9:10 AM IST

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் மதுவிலக்கு என்பது பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில், குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் அதற்கு ஒட்டிய அகமதாபாத் மாவட்டத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பிஹார்கூட இல்லை, தமிழகம்தான் மோசமாம்! எஸ்சி,எஸ்டிக்கு எதிராக வன்முறை குறித்து மத்திய அரசு தகவல்

இந்நிலையில்,  2 நாட்களுக்கு முன்பு சிலர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து 40க்கும் அதிகமானவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- பாஜக துணை தலைவர் விடுதியில் விபச்சாரம்...! அடைத்துவைக்கப்பட்ட சிறுமிகளை அதிரடியாக மீட்ட போலீசார்..

click me!