முதலிரவில் புதுப்பெண்ணை கற்பழித்த மந்திரவாதியும் மைத்துனரும் - ஏன் தெரியுமா...?

Asianet News Tamil  
Published : Sep 25, 2017, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
முதலிரவில் புதுப்பெண்ணை கற்பழித்த மந்திரவாதியும் மைத்துனரும் - ஏன் தெரியுமா...?

சுருக்கம்

The incident that raped the wizard and brother-in-law on the premiere of the newlyweds told her that her husband was at risk.

கணவருக்கு ஆபத்து என கூறி புதுப்பெண்ணை முதலிரவு அன்று மந்திரவாதியும் மைத்துனரும் சேர்ந்து கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் லசார்ட் கேட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவருக்கு ஹபூர் மாவட்டத்தில் பில்கா என்ற பகுதியில் வசிக்கும் துணி வியாபாரியை கடந்த 15ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். 

இதையடுத்து அன்றே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது புதுப்பெண்ணிற்கு பால் கொடுக்கப்பட்டது. பாலை குடித்த மணப்பெண் மயங்கியுள்ளார். 

அடுத்த நாள் காலை எழும்போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதை தொடர்ந்து அந்த பெண் மற்றும் அவரது வீட்டார் மீரட்டில் உள்ள லாசரி கேட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர் . அந்த மனுவில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதாவது,தன் கணவருக்கு தீய சக்தி அண்டியிருப்பதாக கூறி  தன்னுடைய முதலிரவில் கணவருக்கு பதிலாக மந்திரவாதி ஒருவரும் மைத்துனரும் தன்னை கற்பழித்து விட்டதாக தெரிவித்திருந்தார். 

கணவருடன் முதலிரவு நடந்திருந்தால் அன்று இரவே அவர் இறந்து போயிருப்பார் என மந்திரவாதி மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, அந்த மந்திரவாதி மற்றும் மைத்துனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

4.30 மணிநேரத்தில் 19 பீர்.! போட்டிபோட்டு குடித்த ஐடி ஊழியர்கள்.! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா!
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?