2035ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படை தன்னிடம் இருக்கும் மிக்-29, மிராஜ் மற்றும் ஜாக்குவார் வகையைச் சேர்ந்த 15 போர்விமானங்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளது, அதற்குப் பதிலாக எம்கே-2 ரக இலகுரக போர்விமானங்களை சேர்க்க உள்ளது.
2035ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படை தன்னிடம் இருக்கும் மிக்-29, மிராஜ் மற்றும் ஜாக்குவார் வகையைச் சேர்ந்த 15 போர்விமானங்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளது, அதற்குப் பதிலாக எம்கே-2 ரக இலகுரக போர்விமானங்களை சேர்க்க உள்ளது.
2032ம்ஆண்டுக்குள் ஜாக்குவார் போர்விமானங்களில் 6 படைகளுக்கு படிப்படியாக ஓய்வு தரப்படும். இந்த நடவடிக்கை வரும் 2025ம் ஆண்டிலிருந்து தொடங்கும். 2024ம் ஆண்டுக்குள் மிக்-21 ரக விமானங்களில் 3 படைகளுக்கு ஓய்வு தரப்படும். அதைத் தொடர்ந்து மிராஜ்2000 ரக போர்விமானங்கள், மிக்-29 ரக விமானங்களில் 3 படைகளுக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் ஓய்வு அளிக்கப்படும்.
குஜராத், உத்தரகண்ட் மற்றும் உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி... வெளியானது முழு பயண விவரம்!!
இதையடுத்து, 2023ம் ஆண்டு டிசம்பரில் இருந்து இந்திய விமானப்படையில் இலகுரக போர விமானங்களான எம்கே2 சேர்க்கப்படும். 2035ம் ஆண்டுக்குள், மிக்-29, மிராஜ்2000, ஜாக்குவார் ரக போர் விமானங்கள் படிப்படியாக ஓய்வு அளிக்கப்படும். 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இலகுரக எம்கே2 ரக போர் விமானத்தை விமானப்படையில் சேர்க்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இலக்கு வைத்துள்ளது.
இந்நிலையில் இலகுரக எம்கே2 போர்விமானத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் வி மதுசூதனா ராவ் ஏசியாநெட் நியூஸ்ஏபிளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இலகுரக போர்விமானமான எம்கே1, எம்கே அல்பாவைப் போல் இலகுரக எம்கே2 அல்ல. புதிய வடிவமைப்பில் மேம்படுத்தப்பட்டதாக, மிராஜ் 2000, மிக்-29, ஜாக்குவார் போர்விமானங்களுக்கு மாற்றாக அமையும். 6.50 டன் ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் விமானம் இருக்கும்.எம்.கே.-1 விமானத்துக்கு 7 ஹார்ட் பாயின்ட் உள்ளதென்றால் எம்கே-2 விமானத்துக்கு 11 ஹார்ட் பாயின்ட்டுகள் உள்ளன.
குஜராத் காந்திநகரில் நாளை பாதுகாப்பு துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
எம்கே1 2,450 கிலோ எரிபொருளை சுமக்கும், ஆனால் எம்கே-2 இலகுரக போர் விமானம், 3,320 கிலோ எரிபொருளை சுமக்கும் திறனுடையது, 3ஆயிரம் கி.மீ வரை பயணிக்கக்கூடியது.
எம்கே-2 போர் விமானத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி முறையும் இருக்கிறது. ஆனால், எம்கே-1, எம்கே1ஏ விமானங்களில் ஆக்சிஜன் பாட்டில் மட்டுமே விமானிகளுக்கு வழங்க முடியும் இதுவும் 2 மணிநேர அளவுக்குத்தான் தாக்குப்பிடிக்கும். ஆனால், எம்கே2 விமானங்களில் பைலட்களுக்கு ஆக்சிஜன் 8 மணிநேரம் வரை கிடைக்கும்.
பிரான்ஸ், மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் ஆயுதங்களையும் எம்கே2 இலகுரக போர்விமானத்தில் பயன்படுத்த முடியும். அதற்கு ஏற்றார்போல் விமானம்வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் இறக்கைகள் அகலமாகவும், 1,350 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை சுமக்கவும் முடியும். எம்கே1 மற்றும் எம்கே1ஏ விமானங்களைவிட பெரும்பாலும் உள்நாட்டிலேயே எம்கே-2 போர்விமானம் தயாரிக்ககப்பட்டது. 75 சதவீதத்தை உள்நாட்டில் தயாரி்க்க முடிவெடுத்து அதை 82 சதவீதமாக உயர்த்தினோம். விமானத்தின் எஞ்சின் உள்நாட்டில் தயாரிக்கப்படும்”
இவ்வாறு மதுசூதன் தெரிவித்தார்