
பிரதமர் மோடி குஜராத், உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல உள்ள நிலையில் அவரின் முழு பயண விவரம் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி பரிசளிக்க உள்ளார். அவரது இந்த பயணம் கல்வி முதல் சுற்றுச்சூழல் வரை, ஆன்மீக பாரம்பரியம் முதல் விளையாட்டு வரை, சாலைகள் முதல் ரோப்வே வரை, கோயில் புதுப்பித்தல் முதல் சுற்றுலா வரை, லைட் ஹவுஸ் முதல் லைஃப் வரை, உள்கட்டமைப்பு முதல் தொழில்கள் வரையிலான திட்டங்களை உள்ளடக்கியது.
பயண விவரம்:
அக்டோபர் 19 (நாளை) மற்றும் 20 ஆகிய தேதி: பிரதமர் மோடி குஜராத்தில் இருப்பார். தனது குஜராத் பயணத்தின் போது, சுமார் 15,670 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாளை அவர் ஐந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் DefExpo22ஐ அவர் திறந்து வைக்கிறார். பின்னர் அவர் அடாலாஜில் மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் தொடங்குவார்.
இதையும் படிங்க: எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்... 4 நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 3 ட்ரோன்கள்!!
அவர் ஜூனாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார், ராஜ்கோட்டில் இந்திய நகர்ப்புற வீடுகள் மாநாடு 2022-ஐ தொடங்கி வைப்பார், மேலும் பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். புதுமையான கட்டுமான நடைமுறைகளின் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
அக்டோபர் 20 ஆம் தேதி: பிரதமர் மோடி மிஷன் லைஃப் தொடங்குகிறார். இதற்குப் பிறகு, கெவாடியாவில் நடைபெறும் தூதரகத் தலைவர்களின் 10வது மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அவர் வியாராவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: என்னை விமர்சித்தால் செரு*** அடிப்பேன்… YSRCP-க்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண்!!
அக்டோபர் 21 ஆம் தேதி: அதிகாலையில், ஆன்மீகத் தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் நோக்கிச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான இணைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். அவர் ஸ்ரீ கேதார்நாத் கோயிலிலும், ஸ்ரீ பத்ரிநாத் கோயிலிலும் தரிசனம் மற்றும் பூஜை செய்வார். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்வார்.
அக்டோபர் 22 ஆம் தேதி: உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து திரும்புகிறார். அன்றைய தினம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) பயனாளிகளின் க்ரிஹ பிரவேசம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்பார்.
அக்டோபர் 23 ஆம் தேதி: பிரதமர் மோடி உ.பி.யில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி ராம் லல்லா விரஜமானை வழிபட்டு தரிசனம் செய்வார். அயோத்தியில் ராமஜென்மபூமி புனித யாத்திரை நடக்கும் இடத்தை அவர் ஆய்வு செய்கிறார். ஸ்ரீராமரின் முடிசூட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். சரயு ஜியின் புதிய காட் பகுதியில் நடக்கும் அற்புதமான ஆரத்தியையும் பிரதமர் மோடி காண்பார். அதன்பின், பிரமாண்டமான தீபத்சவ் விழாவில் பங்கேற்கிறார்.