எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்... 4 நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 3 ட்ரோன்கள்!!

By Narendran SFirst Published Oct 18, 2022, 9:00 PM IST
Highlights

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த 4 நாட்களில் 3 ட்ரோகள் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டதோடு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த 4 நாட்களில் 3 ட்ரோகள் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டதோடு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் கடந்த 14 ஆம் தேதி ஆளில்லா ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதனை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அதனை சுட்டு வீழ்த்தினர். அதை தொடர்ந்து 16 ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற ட்ரோன் அத்துமீறி புகுந்தது.

இதையும் படிங்க: என்னை விமர்சித்தால் செரு*** அடிப்பேன்… YSRCP-க்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண்!!

அதனை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்த ட்ரோன்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் எடை 12 கிலோ இருக்கும் என்றும் எட்டு இறக்கைகளை கொண்ட ட்ரோன்கள் துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியான கலாம் டோகர் பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் என்று பறந்துள்ளது.

இதையும் படிங்க: வெயில் அதிகமா இருக்கு.. என்ன சன்ஸ்க்ரீன் யூஸ் பண்றீங்க ? யோசிக்காம பதில் சொன்ன ராகுல் காந்தி!

அதனை கண்ட 183வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர்கள் உடனடியாக சுட்டு வீழ்த்தினர். இவ்வாறு கடந்த 4 நாட்களில் 3 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவதால் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு பொடப்பட்டதுடன் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!