என்னை விமர்சித்தால் செரு*** அடிப்பேன்… YSRCP-க்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண்!!

By Narendran S  |  First Published Oct 18, 2022, 8:26 PM IST

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கைகோர்த்து செயல்படுவதாக கூறி ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP பவன் கல்யாணை ட்ரோல் செய்ததை அடுத்து பவன் கல்யாண் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 


ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கைகோர்த்து செயல்படுவதாக கூறி ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP பவன் கல்யாணை ட்ரோல் செய்ததை அடுத்து பவன் கல்யாண் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் மீது ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் செவ்வாய்கிழமை கடுமையாக சாடியுள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் (டிடிபி) கைகோர்த்ததாகக் கூறி பவன் கல்யாணை ஒய்எஸ்ஆர்சிபி ட்ரோல் செய்து வருகிறது.

இதையும் படிங்க: வெயில் அதிகமா இருக்கு.. என்ன சன்ஸ்க்ரீன் யூஸ் பண்றீங்க ? யோசிக்காம பதில் சொன்ன ராகுல் காந்தி!

Tap to resize

Latest Videos

இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியினரை செருப்பால் அடிப்பேன் என கடுமையாக சாடினார். உண்மையில், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரை அடைந்தார், அங்கு அவர் மங்களகிரியில் உள்ள கட்சியின் மைய அலுவலகத்தில் தொழிலாளர்களைச் சந்தித்தார். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய அவர், கையில் இருந்த செருப்புகளை தூக்கி, YSRCP தலைவர்களை அடிப்பதாக மிரட்டினார்.

இதையும் படிங்க: நிதின் கட்கரி விடுத்த சவால்... வெற்றி பெற்ற உஜ்ஜைன் எம்பி... பரிசு என்ன தெரியுமா?

முன்னதாக பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கைகோர்த்ததற்காக ஜெகன் ரெட்டியின் YSRCP தொடர்ந்து அவரை குறிவைத்து வருகிறது. தலைவர்கள் அவரை 'பேக்கேஜ் ஸ்டார்' என்று அழைக்கிறார்கள், அதற்கு பவன் கல்யாண் என்னை யாராவது பேக்கேஜ் ஸ்டார் என்று அழைத்தால், அவரை என் செருப்பால் அடிப்பேன் என்று கூறினார். இதைக் கேட்ட அனைவரும் சத்தம் போட்டு கூச்சலிட்டனர். 

click me!