நிதின் கட்கரி விடுத்த சவால்... வெற்றி பெற்ற உஜ்ஜைன் எம்பி... பரிசு என்ன தெரியுமா?

By Narendran S  |  First Published Oct 18, 2022, 6:30 PM IST

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விடுத்த சவாலில் உஜ்ஜைன் எம்பி அனில் ஃபிரோஜியா வெற்றிப்பெற்றதோடு பேசிய படி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விடுத்த சவாலில் உஜ்ஜைன் எம்பி அனில் ஃபிரோஜியா வெற்றிப்பெற்றதோடு பேசிய படி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக உஜ்ஜைன் எம்பி அனில் ஃபிரோஜியா இழக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும், உஜ்ஜயினியில் வளர்ச்சிப் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சவால் விடுத்தார். இதை அடுத்து சவாலில் வெற்றி பெற இதுவரை 32 கிலோ குறைந்துள்ளார் உஜ்ஜைன் எம்பி. கடந்த ஜூன் மாதம் வரை 15 கிலோ எடையை அனில் குறைத்துள்ளார். மேலும் உறுதியளித்தபடி நிதியை விடுவிக்குமாறும் உஜ்ஜைன் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ.. நடனம் ஆடும் போது அப்படியே கீழே விழுந்து உயிரிழந்த நபர்..

Tap to resize

Latest Videos

இதுக்குறித்து பேசிய உஜ்ஜைன் எம்பி அனில் ஃபிரோஜியா, மேலும் எடையைக் குறைக்க தயாராக இருக்கிறேன். உடல் எடையைக் குறைப்பதற்காக கடுமையான டயட் அட்டவணையைப் பின்பற்றுகிறேன். நான் காலை 5.30 மணிக்கு எழுந்து காலை நடைபயிற்சிக்கு செல்கிறேன். எனது காலை உடற்பயிற்சியில் ஓட்டம், உடற்பயிற்சி மற்றும் யோகா அடங்கும். அதோடு ஆயுர்வேத உணவு அட்டவணையைப் பின்பற்றுகிறேன். அளவான காலை உணவை எடுத்துக்கொள்கிறேன். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு, ஒரு கிண்ணம் பச்சை காய்கறிகள் மற்றும் ஒரு ரொட்டி கலந்த தானியங்களை உண்கிறேன்.

இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற 50வது தலைமை நீதிபதி!டிஒய் சந்திரசூட் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் என்ன?

இடையிடையே கேரட் சூப் அல்லது உலர் பழங்கள் சாப்பிடுவேன். 135 கிலோவாக இருந்த நான் சவாலில் எடை குறைந்து 93 கிலோவானேன் என்று தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனில் ஃபிரோஜியா, கட்கரியின் சவாலை ஏற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட 32 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். மேலும் அதை மத்திய அமைச்சரை சந்தித்து கூறினேன். அவர் அதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வாக்குறுதி அளித்தபடி, அவர் இப்பகுதிக்கு ரூ.2,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவித்தார். 

click me!