காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மாலையே அறிவிக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மாலையே அறிவிக்கப்பட உள்ளது.
24 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக சோனியா காந்தி குடும்பத்தைச் சாராதவர்கள் முதல்முறையாக வர உள்ளனர். காங்கிமூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் இடையே நிலவும் போட்டியில் யார் தலைவராக வர உள்ளார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
காங்கிரஸ் தேர்தலில் இருந்து சசி தரூரை விலகச் சொல்லுங்க! ராகுல் காந்திக்கு நெருக்கடியா? விவரம் என்ன?
காங்கிரஸ் கட்சிக்கு புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் போட்டியிட்டனர். சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கடந்த 24 ஆண்டுகளில் தலைவர் பதவிக்கு போட்டியாதது இதுதான் முதல் முறையாகும்.
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் 6வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் 68 பூத்களிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர், ஏறக்குறை. 9500 வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குப்பெட்டிகளும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
காங்கிரஸ் தேர்தல்: கடைசி நேர மாற்றம்! மல்லிகார்ஜுன கார்கே போட்டி: திக்விஜய் சிங் இல்லை?
இன்று காலை 10மணிக்கு தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி, வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சோனியா காந்தியின் மறைமுக ஆதரவைப் பெற்ற மல்லிகார்ஜூன கார்கேதான் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக வருவார் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் என்பது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக சசி தரூர் வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியி்ட்டார்
மொத்தம் 9915 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 9,500 வாக்குகள் மட்டுமே பதிவானது. காங்கிரஸ் தலைவர் பதிவிக்கான தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தது. தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் ஒரேகட்சி காங்கிரஸ்தான் என்று தேர்தல்அதிகாரி மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தார்.
கடந்த 1939ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மகாத்மா காந்தியின் ஆதரவு வேட்பாளர் பி சீதாராமய்யா போட்டியிட்டார்,ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் தோல்வி அடைந்தார்.
2வதாக 1950ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு சுதந்திரத்துக்குப்பின் தலைவர்தேர்தல் நடந்தது. இதில் புருஷோத்தம் தாஸ் டாண்டன் மற்றும் ஆச்சார்யா கிருபாலினி போட்டியிட்டனர். இதில் சர்தார் படேலின் ஆதரவாளரான டான்டன் வென்றார்.
1977ம் ஆம்டு நடந்த தேர்தலில் சித்தார்த்த சங்கர் ராய் மற்றும் கரண் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட கே பிரம்மானந்த ரெட்டி வென்றார். அதன்பின் 1997ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடந்தது, அப்போது, சரத் பவார், ராஜேஷ் பைலட் இருவரையும் தோற்கடித்து சீதாராம் கேசரி வென்றார்.
2000ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியி்டடு தோல்விஅடைந்தார். சோனியா காந்தி தலைவராகினார். அதன்பின் 2017ம் ஆண்டு ராகுல் காந்தி தலைவராகி 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்தார். சுதந்திரமடைந்து 40 ஆண்டுகளாக காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலைவர்களாக வந்துள்ளனர். கால் நூற்றாண்டுக்குப்பின் காந்தி குடும்பத்தைச் சேராதவர் தலைவராக உரஉள்ளார்.