ஜெயலலிதாவின் திட்டத்தை பின்பற்றுகிறது மத்திய அரசு...!!

 
Published : Jul 04, 2017, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
ஜெயலலிதாவின் திட்டத்தை பின்பற்றுகிறது மத்திய அரசு...!!

சுருக்கம்

The central government is following Jayalalithaa plan

ரெயில் பயணத்தின் போது குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில், 100-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில பிரத்யேக இடங்களை ரெயில்வே துறை அமைக்க உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பஸ் நிறுத்தம், ஆம்னி பஸ்பேருந்து நிறுத்தம் என குறிப்பிட்ட இடங்களில் குழந்தைகளுக்கு  பாலூட்ட தாய்மார்களுக்கு பிரத்யேக இடத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

இந்த திட்டத்தின் எதிரொலியாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி,ரெயில் நிலையங்களிலும் இது போல் பாலூட்டும் தாய்களுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து முதல் கட்டமாக 100-க்கும் மேற்பட்ட முக்கியரெயில் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு என பிரத்யேக இடத்தை ரெயில் அமைக்க இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களுக்கும் ரெயில்அமைச்சம் கடிதம் எழுதி, எந்தெந்த ரெயில் நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்யேக இடம் கொடுக்கலாம் என்பது குறித்த பட்டியலை கேட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ பாலூட்டும் தாய்மார்களுக்கு என பிரத்யேக அறைகளை ரெயில்வே அமைக்க இருக்கிறது.

இது தொடர்பாக கடிதங்கள் மண்டல தலைமை அதிகாரிகளுக்கு எழுதப்பட்டுள்ளன. ரெயில்வே நிலையத்தில் தற்போது இருக்கும் பயணிகள் காத்திருப்பு அறையில், ஒரு சிறிய பிரிவு ஒதுக்கப்பட்டு, அதில் நாற்காலி, மேஜை மற்றும் திரைச்சீலை அமைத்து தனித் தனியாக பரிக்க உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!