
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சர் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பதவிக்காலம் வரும் 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, நஜீம் ஜைதியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான அச்சல் குமார் ஜோதி, 1975 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். குஜராத்தில் தலைமை செயலாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர்களில் ஒருவராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து, அச்சல் குமார் ஜோதி, வரும் 6 ஆம் தேதி முதல் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நாளை மறுநாள் பதவியேற்கிறார்.