அச்சடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..! விரைவில் புழக்கத்துக்கு வருகிறது 200 ரூபாய் நோட்டு!!

Asianet News Tamil  
Published : Jul 04, 2017, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
அச்சடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..! விரைவில் புழக்கத்துக்கு வருகிறது 200 ரூபாய் நோட்டு!!

சுருக்கம்

200 ruppes note will be launch soon by reserve bank of india

ரூபாய் நோட்டு தடை முடிந்து 8 மாதங்களுக்கு பிறகு, ரிசர்வ்வங்கி  முதல்முறையாக 200 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்த நோட்டு புழக்கத்துக்கு வந்தால், நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக வந்த ரூ.200 நோட்டு என்ற பெருமையைப் பெரும்.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.5 லட்சம் கோடி நோட்டுகள் ஒரே நாள் இரவில் மதிப்பிழப்பு செய்யப்பட்டன.

புதிய நோட்டுகள்

அதற்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ்வங்கி அறிமுகப்படுத்தியது. அதன்பின், மக்கள் தபால் நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து செல்லாத நோட்டுகளை மாற்ற அரசால் அறிவுறுத்தப்பட்டனர். 2017 மார்ச் 31-ந்தேதிவரை நோட்டுளை மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்த நிலையில், திடீரென டிசம்பர் 31-ந்தேதியோடு காலக்கெடுவை முடித்துவிட்டது.

100 பேர் சாவு

இந்த 2 மாத காலகட்டத்தில் வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் காத்துக்கிடந்து சொல்லான்னா துயரத்தை அனுபவித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் வங்கி முன் காத்திருக்கும் போது சுருண்டு விழுந்து இறந்தனர்.

தடைகள் நீக்கம்
அதன்பின், ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டனர், தங்கள் சேமிப்பை எடுக்கவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மார்ச் 16-ந்தேதிநீக்கப்பட்டது.

தொடரும் பணத் தட்டுப்பாடு

டிஜிட்டல் பரிமாற்றத்தை  நாட்டு மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்த பல்வேறு பரிசுத்திட்டங்களை மத்தியஅரசு புகுத்தியது. இருப்பினும், இன்னும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.

ஆலோசனை

இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் மத்திய நிதி அமைச்சகத்துடன் ரிசர்வ் வங்கி கவர்னர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டில் நிலவும் பணப்புழக்கத் தட்டுப்பாட்டை நீக்க 200 ரூபாய் நோட்டை அச்சடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ரூ.200 நோட்டு

ஏற்கனவே ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட சில்லரை தட்டுப்பாட்ைடபோக்க 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டால் மக்களுக்கு ஓரளவு வசதியாக இருக்கும் என்றும் விவாதிக்கப்பட்டதாக ெசய்திகள் தெரிவிக்கின்றன. 

அதன்பின் சமீபத்தில் அனைத்து ஊடங்களில் ரூ. 200 நோட்டுவௌிவருவது குறித்து செய்திகள் வௌியாகின. அந்த நோட்டு தொடர்பான புகைப்படங்களும் சமூக ஊடகங்களில்வௌியாகின.

அச்சடிக்க ஒப்புதல்

இந்நிலையில், அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் ஒப்புதலை முறைப்படி ரிசர்வ் வங்கி வழங்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதை ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ 200 ரூபாய் நோட்டு அச்சடிக்கரிசர்வ் வங்கி முறைப்படி ஒப்புதல் கொடுத்தது உண்மைதான்’’ என்றார்.

இதையடுத்து ரிசர்வ் வங்கியின் அச்சகங்களில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்பது தெளிவாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!