bilkis bano: gujarat riots: பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்

By Pothy Raj  |  First Published Aug 17, 2022, 11:15 AM IST

குஜாரத்தைச் சேர்ந்த  பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவி்க்கப்பட்ட 11 பேரும் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக குஜராத்தில் ஒரு மாதிரியாகவும், மத்தியில் வேறுமாதிரியாகவும் முரண்பட்டு நிறக்கிறது.


குஜாரத்தைச் சேர்ந்த  பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவி்க்கப்பட்ட 11 பேரும் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக குஜராத்தில் ஒரு மாதிரியாகவும், மத்தியில் வேறுமாதிரியாகவும் முரண்பட்டு நிறக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சியும், குஜராத்தில் பாஜக ஆட்சியும் இருந்தாலும் பாலியல் குற்றவாளிகளை அணுகும் விதத்தில் இரு அரசுகளும் முரண்பட்டு நிற்கின்றன. 

Tap to resize

Latest Videos

பில்கிஸ் பானு வழக்கு: பெண்கள் பாதுகாப்பு பற்றி பிரதமர் வார்த்தையை நம்பலாமா: காங்கிரஸ் கேள்வி

குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, அவரின் குடும்பத்தார் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் சுதந்திரதினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். 
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு ஒரு கும்பல் தாக்கியது. 

அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கியஅந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேரை கொலை செய்தது.  

அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது இதை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது.

75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும்போது, நீண்டநாட்களாக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதகளை விடுவிப்பது குறித்த சிறப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வகுத்தது. 

முஸ்லிம்,கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இல்லை:மீண்டும் வர்ணாசிரமம்:இந்து தேசம் குறித்த வரைவு அறிக்கை

சட்டநுட்பத்தின்படி பார்த்தால் மத்திய அரசின் விதிகள் பில்கிஸ் பானு வழக்கிற்குப் பொருந்தாது. பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் பில்கிஸ் பானுவை கூட்டுப்பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கொலை செய்துள்ளனர். 

ஆனால் குஜராத் அரசோ கடந்த 1992ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டுவரும் ரெமிஸன் கொள்கையின் அடிப்படையில் 11 பேரையும் விடுத்தது. 

இந்த 11 குற்றவாளிகளில் ஒருவர் தங்களின் தண்டனை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றம் நடந்தது குஜராத் என்பதால், அதைப் பரிசீலிக்க குஜராத் அரசு மட்டுமே பரிசீலிக்க முடியும் என கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் குஜராத் அரசு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருகுழு அமைத்து பரிசீலித்து 11  பேரையும் விடுவித்தது.

ஆனால், இந்த விடுவிப்பு கொள்கையில் குஜராத் அரசும், மத்திய அரசும் வேறுபட்டு நிற்கின்றன. மத்தியில் ஆள்வதும் பாஜகதான், குஜராத்தில் ஆள்வதும் பாஜகதான் என்றாலும், விடுவிப்பு கொள்கையில் முரண்படுகின்றன.

பில்கிஸ் பானு பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு

குற்றவாளிகளை விடுவிப்பு கொள்கையில் இதுபோன்ற பயங்கர குற்றத்தைச் செய்தவர்களை விடுவிக்கும் முன் மத்திய அரசிடம் குஜராத்அரசு ஆலோசித்திருக்க வேண்டும். அதிலும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள், ஒரு குழந்தை உள்பட்ட 7 பேரைக் கொலை செய்தவர்களை தண்டனைக் காலம் முடியும்

முன்பே விடுவிக்க எந்த ரெமிஸன் கொளக்ளையிலும் விதிகள் இல்லை. சிஆர்பிசி 345பிரிவின்படி இந்த குற்றவாளிகளை விடுவிக்கும்முன் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் குஜராத் அரசு.

பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் என்றாலே அவர் சாகும் வரை தனது காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்பதாகும். போதுமான காலம் சிறை தண்டனை அனுபவித்தால், அவர்களை ரெமிஸனில் வெளியேவிடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஆனால், அது அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டுமே தவிர ஆட்சியாளர்களின் விருப்பபடி அல்ல.

இதுபோன்று குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பு என்பது குடியரசுத் தலைவர், ஆளுநர் பரிந்துரையில் நடக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் குஜராத் அரசு பின்பற்றவில்லை, மத்திய அரசிடம் ஆலோசிக்கவில்லை. 

இலவச கல்வி, மருத்துவம் ஏழ்மையை ஒழிக்கும்: தேர்தல் இலவசங்கள் அல்ல: மோடிக்கு கெஜ்ரிவால் பதில்

மத்திய உள்துறை அமைச்சகம் எந்தெந்தக் குற்றம் செய்த கைதிகளை விடுக்கலாம் என்பது குறித்து தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளை விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

நாட்டின் 75-வது சுந்தந்திரதினத்தையொட்டி எந்தெந்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போதுமான தண்டனை பெற்றவர்களை விடுவிக்கலாம், எந்தக் குற்றம்செய்தவர்களை விடுவிக்கக்கூடாது என்று மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் மாநிலங்களுக்கு வழங்கியது.

அதில் 4-வது பக்கத்தில், 6-வது விதியிலும், 2-வது விதியிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 
2-வது விதியில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6-வது விதியில் பாலியல் பலாத்காரத்தில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள், ஆட்கடத்தல், போக்சோ சட்டத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள் ஆகியோரை விடுவிக்கக்கூடாது என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூட்டுப்பலாத்கார வழக்கிலும், 7பேரைக் கொலை செய்த வழக்கிலும் குற்றவாளி என்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கான ஆயுள் தண்டனையும் மும்பை உயர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டவர்களை குஜராத் அரசாங்கம் விடுவித்துள்ளது.

இனிமேல் போனை எடுத்தால் ஹலோ சொல்லக்கூடாது; வந்தே மாதரம் சொல்லணும்: மகாராஷ்டிரா அமைச்சர் உத்தரவு

ஆக, பலாத்காரக் குற்றவாளிகளை விடுவிப்பதில் பாஜக இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பது  தெரிகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது விதியில் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு,  குஜராத்தில் மாநிலத்தில் ஆளும்போது அந்தவிதியை காற்றில் பறக்கவிட்டுள்ளது ஏனோ!

இதைவிட குறைந்த தண்டனை பெற்ற கைதிகள் எல்லாம் சுதந்திரதினத்தில் விடுவிக்காத நிலையில் ஒரு பெண்ணை கூட்டுப்பலாத்காரம் செய்து, அந்தக் குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்த 11 பேருக்கும் எந்தக் கருணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள் என்று சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வியாக முன்வைக்கிறார்கள்.
 

click me!