
உலகிலேயே மிகக்கொடூரமான நாற்றங்களில் ஒன்று காலில் அணியும் “சாக்ஸ்”சை நீண்ட நாட்களாக மாற்றாததால் வரும் “கப்” இருக்குமே அதுதான்…
அதிலும் ஏ.ஸி. ரூமில் இருக்கும் போது, இதுபோன்ற சாக்ஸை சிலர் அணிந்திருந்தால், அதிலிருந்து வரும் “கப்” அத்தனை பேரையும் தெறித்து ஓடவைத்துவிடும். அதுபோன்ற சம்பவம் தான் சமீபத்தில் ஒரு பஸ்ஸில் நடந்துள்ளது. ஏ.ஸி. பஸ்ஸில் பயணித்த இளைஞர் காலில் அணிந்திருந்த சாக்ஸால் ுபயணிகள் அல்லகோலப்பட்டு ரகளையே நடந்துவிட்டது.
இமாச்சலப்பிரதேசம் தரம்சாலா நகரில் இருந்து டெல்லியில் ஏ.ஸி. பஸ் ஒன்று கடந்த மாதம் 27ந்தேதி சென்றது. அந்த பஸ்ஸில் பிரகாஷ்குமார் என்ற இளைஞர் பயணித்தார். அந்த இளைஞர் நீண்ட நாட்களாக காலில் அணிந்திருந்த சாக்ஸை மாற்றாததால், பஸ்ஸுக்குள் ஏறி அமர்ந்தது “ஷீ” வை கழற்றியதும் அதில் இருந்த துர்நாற்றம் பஸ் பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.
சிறிது நேரம் பொறுமையாக இருந்த பஸ் பயணிகளால் அதற்குமேல் தாங்கமுடியவில்லை. பஸ்ஸுக்குள் இருந்து வரும் பொறுக்க முடியாத துர்நாற்றத்தால், அனைவரும் மூக்கைப் பிடித்து பயணிக்க தொடங்கினர்.
பிரகாஷ்குமார் அருகே இருந்த பயணி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து அவரிடம் “உங்கள் சாக்ஸை எடுத்து “பேக்கில்” வையுங்கள், அல்லது வெளியே தூக்கி வீசுங்கள்”. “நாற்றம் தாங்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இதனால், கோபப்பட்ட பிரகாஷ்குமார் சாக்ஸை எடுத்து உள்ளே வைக்க முடியாது எனக்கூறி பிரச்சினை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பஸ் பயணிகளுக்கு தெரியவந்தது.
அனைத்து பயணிகளும் பிரகாஷ்குமாரின் சாக்ஸ் தான் நாற்றத்துக்கு காரணம் எனத் தெரிந்ததும், அதை உள்ளே எடுத்துவைக்கவும், வீசிவெளியே எறியவும் கூறினார். ஆனால், பிரகாஷ் மறுத்து ரகளையில் ஈடுபட்டார். இதனால், பஸ்ஸூக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, உனா மாவட்டம், பார்வை நகர் போலீஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்த டிரைவரிடம் அனைத்து பயணிகளும் கூறினர். டிரைவர் போலீஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்தியவுடன், அந்த இளைஞர் பிரகாஷ் மீது போலிசில் பயணிகள் அனைவரும் புகார் செய்தனர். இதனால், போலீசிஸ் நிலையத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். பிரகாஷ் குமார் மீது மக்களுக்கு இடையூறு செய்த வழக்கில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின், ஜாமீனில் விடுவித்தனர்.
தன்னுடைய சாக்ஸ் நாற்றம் அடிக்காத நிலையில், மற்ற பயணிகள் தன்னை தாக்கியதாக போலீசில் பிரகாஷ் குமார் போட்டியாக புகார் செய்தார்.