2016ம் ஆண்டில் பெண்களும், சிறுமிகளுமே அதிகமாக காணாமல் போனார்கள் - தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையால் அதிர்ச்சி

Asianet News Tamil  
Published : Dec 02, 2017, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
2016ம் ஆண்டில் பெண்களும், சிறுமிகளுமே அதிகமாக காணாமல் போனார்கள் - தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையால் அதிர்ச்சி

சுருக்கம்

In the disappearance of men the number of girls and girls has doubled

கடந்த 2016ம் ஆண்டில் நாட்டில் காணாமல்போனவர்களில் சிறுவர்கள், ஆண்களைக்காட்டிலும், சிறுமிகள், பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது.

 வரலாற்றிலேயே முதல்முறையாக என்.சி.ஆர்.பி. காணாமல் போனவர்கள் குறித்தஅறிக்கை குறித்த பட்டியலை வெளியிடுகிறது.

 இது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

 கடந்த 2016ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 2.90 லட்சம் பேர் காணமல் போனார்கள். இதில் 1.74 லட்சம் பேர் பெண்கள் ஆவர். காணாமல் போனவர்களில் 60 சதவீதம் பெண்கள், 24சதவீதம் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள். கடந்த 2015ம் ஆண்டில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 569 பேர் காணாமல் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த ஆண்டில் 18 வயதுக்குகீழ்பட்ட சிறுவர்கள் 22 ஆயிரத்து 340 பேரைக் காணவில்லை, இது சிறுமிகள் எண்ணிக்கையில் இருமடங்காகி, 41 ஆயிரத்து 67 பேர் காணாமல்போய் உள்ளனர்.

 இதில் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 84 ஆயிரத்து 852 ஆண்களும், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 944 பெண்களும் காணாமல் போய் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக காணாமல் போனவர்களில் 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்கள் 7.7 சதவீதமாகவம், 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகள் 14 சதவீதமாகவும், 18 முதல் 60வயதுடைய பெண்கள் 44.4 சதவீதமாகவும், ஆண்களஅ 30 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களில் பெண்களைக் காட்டிலும்(4,010) ஆண்களே(9,266) அதிகமாக காணாமல் போகியுள்ளனற்.

கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 87 ஆள்கடத்தல், பாலியல்தொழிலில் ஈடுபடுத்தல் வழக்கில் 7ஆயிரத்து 561 பெண்கள், சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 49 ஆயரித்து 338 பெண்கள் உள்ளிட்ட 94 ஆயிரத்து 919 பேர் காணாமல் போயுள்ளனர். அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் 59 ஆயிரத்து 660 பேரைக் காணவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!