நாடு முழுவதும் 300 தனியார் இன்ஜினீரிங் காலேஜ் மூடல்...! ஏஐசிடிஇ முடிவு!

Asianet News Tamil  
Published : Dec 02, 2017, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
நாடு முழுவதும் 300 தனியார் இன்ஜினீரிங் காலேஜ் மூடல்...! ஏஐசிடிஇ முடிவு!

சுருக்கம்

300 private engineering college closure across the country

இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராத பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்  முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக தரப்பில் கேட்கும்போது, நாடு முழுதும் 3 ஆயிரம் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 13.56 லட்சம் மாணவர்கள் படிக்க முடியும் என்றும்  இக்கல்லூரிகளை ஆய்வு செய்த போது, 300 கல்லூரிகளில் தொடர்ந்து 5 வருடங்களாக 30 சதவீதத்திற்கு கீழ் மாணவர் சேர்ந்ததால், அடுத்த 2018 - 19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், பொறியியல் கல்லூரியாக செயல்பட தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும்  அக்கல்லூரிகளை கலை அறிவியல் அல்லது தொழில்படிப்பு கல்லூரிகளாக மாற்றி கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!