குடியரசு தின அணிவகுப்பில்...இடம் பெறும் அலங்கார ஊர்திகள் !! என்னென்ன தெரியுமா..?

By Raghupati RFirst Published Jan 26, 2022, 11:10 AM IST
Highlights

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

குடியரசு தின அணிவகுப்பில் மொத்தம் 21  அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12, அமைச்சகங்களின் 9 ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும். குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர்  உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12 அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கிறது.

குஜராத்தின் அலங்கார ஊர்தி குஜராத்தின் பழங்குடி புரட்சியாளர்களைக் எடுத்துக் காட்டும் அதே வேளையில், கோவாவின் அலங்கார ஊர்தி பல்வேறு வரலாற்று மற்றும் இயற்கை அழகுகளையும்  'மறந்து போன பாரம்பரிய சின்னங்கள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது என்று பாதுகாப்பு துறை PRO  தெரிவித்துள்ளது.

பஞ்சாபின் அலங்கார ஊர்தி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மாநிலத்தின் மகத்தான பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது. உத்தரகாண்ட் மாநில அட்டவணை  ஆன்மிக தளங்களுக்கான சாலைத் தொடர்பில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையிலானது.

மேகாலயாவின் 50 ஆண்டுகால மாநில அந்தஸ்து, அம்மாநில கூட்டுறவு சங்கங்கள்,  சுயஉதவி குழுக்கள் மூலம் சாதித்த பெண்களுக்கு கவுரவ படுத்தும் வகையில் மேகாலயாவின் அலங்கார ஊர்தியில் இருக்கும். மூங்கில் மற்றும் கரும்பு கைவினைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

அருணாச்சலப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்தும் ஏகாதிபத்திய கொள்கைக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய  பழங்குடியினரின்  வீரத்தை எடுத்துக்காட்டுகிறது. ODOP திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மூலம் அடைந்துள்ள சாதனைகளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அலங்கார ஊர்தி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி, மாறி வரும் சூழ்நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் மேலும் ஹரியானா,கர்நாடகா,மகாராஷ்டிரா,சத்தீஸ்கர்,கோவா ஆகிய மாநிலங்களின் ஊர்திகளும் இடம்பெறுகிறது.

click me!