ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jan 26, 2022, 10:10 AM IST
Highlights

சிவப்பு  ரேஷன் கார்டுதாரர்கள் 2 மாதங்களுக்கான பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சிவப்பு  ரேஷன் கார்டுதாரர்கள் 2 மாதங்களுக்கான பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 4 மாதத்துக்கு அரிசி வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 2 மாதத்துக்கான அரிசி புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் இன்று முதல் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, வில்லியனூர், மங்கலம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், உழவர்கரை, முதலியார்பேட்டை, உப்பளம், ராஜ்பவன், உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 14 தொகுதிகளில் விநியோகிக்கப்பட உள்ளது.

எனவே சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் வழக்கம்போல் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள்  மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இலவச அரிசியை பெற்றுக்கொள்ளலாம். அரிசி வினியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!