ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - சி.ஆர்.பி.எஃப் எஸ்.ஐ. வீரமரணம்"

 
Published : Jun 25, 2017, 09:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - சி.ஆர்.பி.எஃப் எஸ்.ஐ. வீரமரணம்"

சுருக்கம்

Terrorist Strike Kills Crpf si injuries two jawans

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் போலீசாரின் வாகனம் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இத்துப்பாக்கிச் சண்டையில் காவல் ஆய்வாளர் குண்டடி பட்டு வீர மரணம் அடைந்தார்.

படுகாயமடைந்த 2 வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்திருப்பதால் அப்பகுதியைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இணையதள சேவையின் வேகம்வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!
திருவனந்தபுரம் மாநகராட்சியை அடித்து தூக்குகிறது பாஜக..! விழி பிதுங்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்!