என் அரசின் 100 நாள் சாதனையை பாருங்க…  முதல்வர் ஆதித்யநாத் வெள்ளை அறிக்கை !

 
Published : Jun 24, 2017, 09:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
என் அரசின் 100 நாள் சாதனையை பாருங்க…  முதல்வர் ஆதித்யநாத் வெள்ளை அறிக்கை !

சுருக்கம்

Yogi Adityanath government white paper likely to slam previous SP regime

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் பதவியேற்ற பா.ஜ.க. அரசின் 100 நாள் சாதனையை விளக்கி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

நலத்திட்டங்கள்

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது.

முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

விவசாயக் கடன் தள்ளுபடி

அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

100 நாள் சாதனை

மேலும், மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.க. ஏற்ற 26-3-2017-க்கு பின்னர் கடந்த 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செய்யப்பட்ட பணிகள் (சாதனை) தொடர்பான வெள்ளை அறிக்கையும் 27-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

மாநில அரசின் செய்தி தொடர்பாளரும் சுகாதாரத்துறை மந்திரியுமான சித்தார்த்நாத் சிங் இந்தத் தகவலை தெரிவித்தார்.

அகிலேஷ் ஆட்சி குளறுபடி

இதற்கு முன்பு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாகவும் புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை இன்று (25-ம் தேதி) பிற்பகல் செய்தியாளர்கள் முன்னிலையில் அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யாநாத் வெளியிடுகிறார்.

இந்த அறிக்கையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் லஞ்சப் பண பரிமாற்றம், ஆட்சியில் நிர்வாகத்திறமை குறைவால் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்