
மூன்று நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கடந்த 24 ஆம் தேதி போர்ச்சுகல் சென்றடைந்தார். விமான நிலாயம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் அந்தோணியோ கோஸ்டோவை மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 4 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கவும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத் தொடர்ந்து போர்ச்சுகல் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்றிரவு அமெரிக்கா சென்றடைந்தார். வாஷிங்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இரண்டு நாட்கள் தங்கி இருக்கும் மோடி, அதிபர் டொனால்டு டிர்ம்பை இன்று சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், ராணுவ கூட்டுறவு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.