தீவிரவாதிகளுடன் எல்லையில் பயங்கர மோதல் !! பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் !!

Published : Mar 01, 2019, 08:32 PM IST
தீவிரவாதிகளுடன் எல்லையில் பயங்கர மோதல் !! பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் !!

சுருக்கம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட கடும் மோதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  

புல்வாமா தாக்கதலுக்கும் பிறகு இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்கியதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாராவில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மேற்கொண்டது. இன்று மாலை  பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு சிதறியது. 

சண்டையில் உயிரிழந்ததாக கருதப்பட்ட பயங்கரவாதி ஒருவன், கண்ணிமைக்கும் நேரத்தில் இடிபாடுகளுக்கு இடையே எழுந்து வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டான். 

உடனடியாக அவன் கொல்லப்பட்டான். அவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர், ராணுவ வீரர் மற்றும் காஷ்மீர் போலீசை சேர்ந்த இரண்டு போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இச்சண்டையில் பாதுகாப்பு படையினர் 8 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

PREV
click me!

Recommended Stories

திருப்பதி: திருமலை போகிறீர்களா? தரிசனத்தில் திடீர் மாற்றம்! பக்தர்கள் கவனத்திற்கு!
நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்