இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணுமாம் !! தவியாய் தவிக்கும் பாகிஸ்தான் மக்கள் !!

By Selvanayagam PFirst Published Mar 1, 2019, 7:05 PM IST
Highlights

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபி நந்தனை பிடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டதையடுத்து அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை எழுந்துள்ளது.
 

இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்று சுட்டுவீழ்த்திய இந்திய விங் கமாண்டர் அப் நந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.

இதையடுத்து சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது.அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இம்ரான்கான் பேசுகையில், பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்து எதையும் கூறவில்லை. ஆனால், இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடைய செய்கிறது. நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க, இந்திய பிரமர் மோடியிடம் தொலைபேசியில் தெரிவிக்க முயற்சித்தேன். 

ஆனால் முடியவில்லை. பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற நிலை பயந்துவிட்டோம் என பொருள் கிடையாது என்றும் குறிப்பிட்டார். இம்ரான்கானின் அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலக நாடுகளில் இருந்து இம்ரான்கானின் நடவடிக்கையை மக்கள் டுவிட்டரில் பாராட்டினர்.

இந்நிலையில் இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கவேண்டும் என்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. 

டுவிட்டரில் #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் இம்ரான்கான் நடவடிக்கையை பாராட்டி, அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

click me!