இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்... உற்சாக வரவேற்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2019, 5:40 PM IST
Highlights

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினரிடம் மாலை 5.20 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார்.  
 

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய ராணுவத்தினரிடம் மாலை 5.20 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார்.

 

அமைதியை வலியுறுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். லாகூரில் முக்கிய பிரமுகர்கள் அழைத்து செல்லப்படும் வழியில் தரைமார்க்கமாக பஞ்சாப் எல்லையில் வாகா எல்லையை வந்தடைந்தார். வாகாவில் பாகிஸ்தான் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்ட அவரிடம் குடியுரைமை வரைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா  குடியுரிமைகள் நடைமுறைகள் முடிந்தபின் விங் கமாண்டர் அபினந்தன், இந்திய வெளியுறவு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.  அவரை வரவேற்க அத்தாரி பகுதியில் பெரும் அளிவிலான மக்கள் கூட்டம் கூடின.

அபிநந்தனை ஏர்வைஸ் மார்சல் ரவி கபூர் வரவேற்றார். அமிர்தசரஸ் நகருக்கு அபிநந்தனை விமானப்படை, ராணுவ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அபிநந்தனை வரவேற்க ஏராளமான இந்திய மக்கள் தேசிய கொடியுடன் திரண்டனர்.  அபிநந்தனை வரவேற்கும் நிகழ்வையொட்டி வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அபிநந்தன் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவருடன் அவரது மனைவி, பெற்றோர்களும் விமானத்தில் செல்ல உள்ளனர். டெல்லியில் ஒருவார காலம் விமான படை பாதுகாப்பில் தங்க வைக்கப்பட உள்ளார். அங்கு பாகிஸ்தானின் நடந்த சம்பவம் குறித்து அபிநந்தனிடம் விசாரனை நடைபெற இருக்கிறது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற இருக்கிறது. 

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் 3 நாட்கள் இருந்திருக்கிறார். ஆகையால் அங்கு அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படைன் ரகசியங்களை திரட்டியதா? போன்ற விவகரங்களையும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.  
 

click me!