பாக் ராணுவத்தினரிடம் சிக்கிய போது கையில் இருந்த ஆவணத்தை அபிநந்தன் என்ன செய்தார் தெரியுமா..? கசிந்த திக் திக் தகவல்..!

By ezhil mozhiFirst Published Mar 1, 2019, 7:01 PM IST
Highlights

விங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தனை வரவேற்று நாடே கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளத்தில் அபிநந்தன் குறித்த ஹேஷ்டேக் தான் உலக அலாவில் முதலிடத்தில் உள்ளது. 

விங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தனை வரவேற்று நாடே கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளத்தில் அபிநந்தன் குறித்த ஹேஷ்டேக் தான் உலக அலாவில் முதலிடத்தில் உள்ளது. 

நாடே பெரும் உற்சாகத்தில் அபிநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மிக முக்கியமான விஷயம் ஒன்று கசிந்துள்ளது. விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் தரையிறங்கிய போது, தன்னிடம் இருந்த சில முக்கிய ஆவணங்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் கிடைத்துவிட கூடாது என கருதி விழுங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலில் 44 இந்திய ராணுவவீரர்களின் வீர மரணத்திற்கு பிறகு, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாரானது இந்தியா. அதன் படி, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தி 300 கும் மேற்பட்ட பயங்கர வாதிகளை அழித்தது இந்தியா. 

மீண்டும், பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக விமானம் கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது இந்திய விமானம் மீது பாகிஸ்தான் விமான படை நடத்திய தாக்குதலில் இந்திய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் பறந்து பாகிஸ்தான் எல்லையில் தரை இறங்க வேண்டிய நிலையாயிற்று. இதனை நேரில் பார்த்த பாகிஸ்தான் எல்லை பகுதியில் வசிக்கும் முகமது ரசாக் சௌத்ரி என்பவர் பாகிஸ்தானிய பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி கொடுத்து உள்ளார்.

அதில்,"என் பெயர் முகமது ரசாக் சௌத்ரி. பிம்பர் மாவட்டத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் வசித்து வருகிறேன். வான் வழி தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அதாவது காலை 8.45 மணிக்கு இரண்டு விமானங்கள் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தியதை பார்த்தேன். அந்த விமனாத்தில் ஒன்று வெடித்து சிதறி கீழே விழுந்தது. இன்னொரு விமானம் தீப்பிடித்து எரிந்து வேகமாக கீழே விழுவதை நேரில் பார்த்தேன். உடன், பாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து ஒருவர் கீழே இறங்கியதை பார்க்க முடிந்தது. அந்த விமானி, இது இந்தியாவா என கேட்டார். அங்கிருந்த ஒருவர் ஆம் இந்தியா என சொல்லி உள்ளார்.

அதற்குள் அங்கு வந்த இளைஞர் கூட்டம் 'பாகிஸ்தான் ராணுவம் ஜிந்தாபாத்' என கூறினார். உடனே அந்த விமானி, வான் நோக்கி சுட்டார். அவரை மற்ற இளைஞர்கள் துரத்த தொடங்கினர். அப்போது அங்கிருந்த குளத்தில் அவர் குதித்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த சில வரைபடத்தை விழுங்க முயற்சி செய்தார். மேலும் பல ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தது. பின்னர் அவரை சில இளைஞர்கள் பிடித்தனர். அந்த சமயத்தில் தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்" என அவர் தெரிவித்து உள்ளார். 

click me!