தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 2,290 வேட்பாளர்களின் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் உள்ள 32.6 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் ஆளும் பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) கே சந்திரசேகர ராவ் போன்ற முக்கிய தேசிய தலைவர்களைக் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
106 தொகுதிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கும், இடதுசாரி வன்முறையால் பாதிக்கப்பட்ட 13 பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும். 250,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்..
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. ஆளும் பிஆர்எஸ் அனைத்து 119 இடங்களிலும் வேட்பாளர்களை கொண்டுள்ளது, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா முறையே 111 மற்றும் 8 இடங்களில் போட்டியிடுகின்றன. மேலும், காங்கிரஸ் 118 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ள நிலையில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியில் போட்டியிருகிறது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 3.17 கோடி வாக்காளர்கள், தேர்தல் களத்தில் 2,290 வேட்பாளர்களின் (221 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உட்பட) தலைவிதியைத் தீர்மானிப்பார்கள். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு!
கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கடந்த 10 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டது. ஆனால் அதே நேரம் தெலங்கானாவில் முதன்முறை ஆட்சியமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதே போல் பாஜகவும், பிஆர்எஸ் கட்சியின் தவறான ஆட்சி மற்றும் ஊழலை" முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த தீவிர பரப்புரையில் ஈடுபட்டது.
நவம்பர் 7 முதல் நவம்பர் 25 வரை வாக்குப்பதிவு நடந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்த தெலுங்கானா முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.