ரோஜ்கர் மேளா: 51,000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கும் பிரதமர் மோடி

By SG BalanFirst Published Nov 29, 2023, 11:21 PM IST
Highlights

பல்வேறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துறைகளில் பணிக்குத் தேர்வாகியுள்ள 51 ஆயிரம் பேர் பிரதமர் மோடியிடம் இருந்து வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளைப் பெற உள்ளனர்.

பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாகப் பணியில் சேரும் 51,000 ஊழியர்களுக்கு, நாளை (நவம்பர் 30) பணி நியமன ஆணையை பிரதமர் மோடி விநியோகிக்க உள்ளார். 'ரோஜ்கர் மேளா' திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 37 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

பல்வேறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துறைகளில் பணிக்குத் தேர்வாகியுள்ள 51 ஆயிரம் பேர் பிரதமர் மோடியிடம் இருந்து வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளைப் பெற உள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நிதிச் சேவைகள், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல துறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பெற உள்ளனர்.

சுரங்கத்திற்குள் இன்னும் 25 நாளுக்கு சாப்பாடு இருக்கு: மீட்கப்பட்ட தொழிலாளர் தகவல்

ரோஜ்கர் மேளா என்பது அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக பிரதமர் மோடி உருவாக்கிய இயக்கம். இது புதிய வேலைவாய்ப்புகளை பெருக ஊக்கம் அளிப்பதோடு இளைஞர்களுக்கு அரசுத் துறைகளில் பணியாற்றவும் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்காற்றவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

பணி நியமன ஆணையைப் பெறும் அனைவருக்கும் கர்மயோகி கையேடு விநியோகிக்கப்படும். கர்மயோகி கையேடு என்பது பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான வழிகாட்டல் தொகுப்பு ஆகும்.

இனி மணிப்பூரில் வன்முறை இருக்காது! அமைதியை நிலைநாட்ட அமித் ஷாவுடன் UNLF உடன்படிக்கை!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!