நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு!

By SG Balan  |  First Published Nov 29, 2023, 11:51 PM IST

குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்கள் உள்பட 18 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 7 புதிய மசோதாக்கள் உள்பட 18 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, டிசம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 முதல் ஆகஸ்டு 11 வரை நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Tap to resize

Latest Videos

குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். இந்தக் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் டிசம்பர் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு மத்திய அரசு சார்பில் அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்நிலையில் நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதில், 7 புதிய மசோதாக்கள் உள்பட 18 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தெலுங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கும் மசோதா என ஏழு புதிய மசோதாக்கள் இந்தக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட உள்ளன.

இத்துடன் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான மூன்று குற்றவியல் சட்டங்கள் உள்பட பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஜிம் செல்லும் ஆண்களில் 7 பேரில் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு அபாயம்! ஆய்வில் ஷாக்கிங் முடிவுகள்!

click me!