குஜராத்தில் கடந்த 2002ம்ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்புக்குப்பின் நடந்த கலவரம் தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தூக்கு தண்டனை கிடைக்க வைக்க தீஸ்தா செதல்வாத் திட்டமிட்டிருந்தார் என்று சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ம்ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்புக்குப்பின் நடந்த கலவரம் தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தூக்கு தண்டனை கிடைக்க வைக்க தீஸ்தா செதல்வாத் திட்டமிட்டிருந்தார் என்று சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம்ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பில் 50க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப்பின் கோத்ராவில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக முக்கிய வழக்குகளில் மறு புலன் விசாரணை, மறு நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் மனு செய்தனர், அதில் தீஸ்தா செதல்வாத்தின் தொண்டு நிறுவனமும் சேர்ந்து மனு தாக்கல் செய்தது.
யார் இந்த பிஎப்ஐ அமைப்பு? என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் 100 பேர் கைது?காரணம் என்ன?
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடிக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை எனக் கூறி மனுவை கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில்மனுதாரராக இருந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத்தை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக பொய் ஆதாரங்கள் உருவாக்கி வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறியும், சாட்சிகளை உருவாக்கிய வழக்கிலும் தீஸ்தா செதல்வாத் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டனர்.
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? அதை வாங்க மறுத்தா என்ன ஆகும் தெரியுமா?
இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்குழுவினர் 100 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை அலகாபாத் மெட்ரோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் “ தீஸ்தா செதல்வாத், முன்னாள் போலீஸ் டிஐஜி ஆர்பி ஸ்ரீகுமார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சாவ் பாட் ஆகியோர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில், குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களைச் சேகரித்து, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையை முடிக்க தீஸ்தா செதல்வாத் திட்டமிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு தூக்கு தண்டனை கிடைக்கவும் ஆதாரங்களை உருவாக்கி செதல்வாத் திட்டமிட்டார்.
இதற்கு தீஸ்தா செதல்வாத்துக்கு, போலீஸ் உயர் அதிகாரிகளான ஸ்ரீகுமார், சஞ்சீவ் பாட் ஆகியோர் போலியாக ஆவணங்களை உருவாக்கிக் கொடுத்தனர். நரேந்திர மோடியின் மரியாதையைக் குலைத்து, அவரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக ஏராளமானோர் சேர்ந்து போலியான ஆவணங்கள் திரட்டி பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டது
20 ஆண்டுகளுக்குப்பின்!காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல்: நாளை அறிவிக்கை வெளியீடு
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்தவிதமான காரணமும் இன்றியும், காரணத்தை கூறாமலும் வலுக்கட்டாயமாக ஆவணங்களில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் கையொப்பமிட்டனர். அதுமட்டுமல்லாமல் தீஸ்தா செதல்வாத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது
கலவர சாட்சியங்களையும் போலீஸ் அதிகாரி ஸ்ரீகுமார் மிரட்டியுள்ளார். தீஸ்தாவை ஆதரிக்காவிட்டால், முஸ்லிம்கள் உங்களுக்கு எதிராகத் திரும்புவார்கள். தீவிரவாதிகளாக குறிவைக்கப்படுவீர்கள், உங்களுக்குள் சண்டையிடுவீர்கள்.இதனால் உங்கள் எதிரிகளும், மோடியும்தான் பலன் அடைவார்கள் என மிரட்டியுள்ளார்.
நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியங்களையும், ஆவணங்களையும் திரட்ட ஏராளமான பணம் செலவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தலைவர்களும் கலவரத்தை தவறாக பிரச்சாரம் செய்துள்ளனர்.
குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது,வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள் என பாதிக்கப்பட்டவர்களிடம் காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்.
சஞ்சீவ் பாட், தீஸ்தா இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதன் மூலம் என்ஜிஓ, நீதிமன்றம், அரசு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.