பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்புடைய தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட13 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்புடைய தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட13 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பாகும். இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்தல், தீவிரவாதத்திற்கு பயிற்சிகள் அளித்தல் மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து நாச வேலையில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் மிகப்பெரிய சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் சோதனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் PFI நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை- காரணம் என்ன..?
குறிப்பாக கேரளாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ மாநில தலைமை அலுவலகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது. பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து பி.எப்.ஐ கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- rear seat belt: car seat belt: கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி