பெண்கள் என்ன உடை அணியணும்னு அவங்களுக்கு தெரியும்.. மத்தவங்க தலையிட தேவையில்ல - சத்குரு அதிரடி

Published : Sep 21, 2022, 09:26 PM ISTUpdated : Sep 21, 2022, 10:15 PM IST
பெண்கள்  என்ன உடை அணியணும்னு அவங்களுக்கு தெரியும்.. மத்தவங்க தலையிட தேவையில்ல - சத்குரு அதிரடி

சுருக்கம்

‘பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை மதத்தினரோ, காழ்ப்புணர்ச்சியாளர்களோ தீர்மானிக்கக் கூடாது’ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

ஈாரனில் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீஸாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பெண் காவலில் உயிரிழந்தார். இதையடுத்து, நாடுமுழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டுமென்பதை மதத்தவரோ சபலபுத்தியுடையோரோ தீர்மானிக்க கூடாது. பெண்களே தங்களுக்கான உடையை நிர்ணயிக்கட்டும். மதரீதியாகவோ மற்றவற்றிற்காகவோ ஒருவர் அணியும் ஆடைக்காக அவரை தண்டித்து பழிதீர்க்கும் இந்த கலாச்சாரம் முடிவுக்கு வரவேண்டும்' என்று சத்குரு  ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ஈஷா சார்பில் தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் வழங்கல்..!

ஈரானில் உள்ள நகரங்களில் சுமார் 15 நகரங்கள் மாஷா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களின் போராட்டத்தை காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

நிலைமையை கட்டுப்படுத்த பலரை கைது செய்தனர். வடகிழக்கில் மஷாத், வடமேற்கில் தப்ரிஸ், வடக்கில் ராஷ்ட், மையத்தில் இஸ்பஹான் மற்றும் தெற்கில் ஷிராஸ் நகரங்களில் எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமினியின் சொந்த மாகாணத்தில் போராட்டத்தின் போது மூன்று பேர் இறந்தனர்.

இன்று தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பெண்கள் தங்கள் ஹிஜாப்களை எரித்து, தலைமுடியை வெட்டினார்கள். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நியாயமான விசாரணைக்கு அமினியின் பெற்றோருக்கு உறுதியளித்த போதிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.

இதையும் படிங்க - மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக ‘புர்ஜ் கலிஃபாவில்’ லேசர் ஷோ! சத்குருவின் 2 நிமிட வீடியோவும் ஒளிபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!