ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சனிக்கிழமை தலைநகர் டெல்லியில் சந்தித்துள்ளார். உள்துறை அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்துகொண்டார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனது முன்னாள் கூட்டணிக் கட்சியான பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க சாத்தியம் உள்ளதாக கூறப்பட்டு வந்த பின்னணியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆந்திராவில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவும் தெலுங்கானா தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தலைவர்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
வேலை செய்யாத மைக்கை எரிச்சலுடன் தூக்கி எறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!
பாஜக தலைமை தனது 'மிஷன் சவுத்' திட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ளது. பிரிவினைக்குப் பிந்தைய ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையால் 2018ஆம் ஆண்டு பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட நாயுடு, பாஜகவுடன் தேர்தல் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாஜகவின் மாநில தலைவர்களில் ஒரு பகுதியினர், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எதிர்க்கின்றனர். 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை விமர்சித்ததையும் இந்தத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் எல்கேஜி ப்ரெண்டை 18 வருஷம் கழித்து சந்தித்த பெண்!
இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில் அமித் ஷா தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியை நிராகரித்திருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு முதல் சந்திரபாபு நாயுடு, பிரதமர் உட்பட பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு பலமுறை சென்றுவந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து களம் காணும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதை அமித் ஷா - சந்திரபாபு நாயுடு சந்திப்பு கூறுகிறது.
எலக்ட்ரானிக் இன்டர்லாக் தான் ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்: ரயில்வே அமைச்சர் விளக்கம்