அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்ட டாப் 10 மாநிலங்கள்..! தமிழ்நாடு லிஸ்ட்லயே இல்ல

By karthikeyan VFirst Published May 13, 2021, 10:11 PM IST
Highlights

அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. 
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 30,621 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனாவிலிருந்து மக்களை காக்கும் பேராயுதம் தடுப்பூசி என்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் போட்டுக்கொள்வதற்கு தடுப்பூசி இல்லை. தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தற்போதைக்கு உள்நாட்டு தடுப்பூசிகளான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தும், அது ஒதுக்கப்படவில்லை என்பதால், தமிழக அரசு வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கான டெண்டர் கோரியுள்ளது. 

இன்றைய (மே 13) நிலவரப்படி தேசியளவில் 13.76 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 4 கோடி பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் பெற்றுவிட்டனர். எஞ்சியவர்கள் 2வது டோஸை பெறவில்லை.

இந்த 13.76 கோடி பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  40.3%, 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 45.6%, 30-45 வயதுக்குட்பட்டவர்கள் 9.2% ஆக உள்ளது. இது தவிர 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 4.9%.

இந்நிலையில், இந்தியாவில் அதிகமான தடுப்பூசி போடப்பட்ட டாப் 10 மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிராவில் 1.8 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  

2ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், 1.46 கோடி பேருக்கும், 3ம் இடத்தில் உள்ள குஜராத்தில் 1.45 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த டாப் 10 பட்டியலில் தமிழ்நாடு இல்லை. ஆனால் பாதிப்பில் 5ம் இடத்தில் உள்ளது. 
 

click me!