கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மக்களிடம் நேர்மறை எண்ணங்களை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்-ன் முயற்சி..!

By karthikeyan VFirst Published May 10, 2021, 9:11 PM IST
Highlights

கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி, இந்திய மக்களிடையே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கியுள்ள இந்த நெருக்கடியான சூழலில், மக்களிடம் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க, சமயம், ஆன்மீக தலைவர்களின் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நிரம்பிவழியும் மருத்துவமனை, லாக்டவுன், வருவாய் இழப்பு என மக்கள் நெருக்கடியான சூழலில் மக்கள் பயத்துடன் உள்ளனர்.

இந்நிலையில், இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் நோக்கில், "Positivity Unlimited" என்ற பெயரில், சமயம், ஆன்மீகம், தொழில் ஆகிய துறைகளை சேர்ந்த தலைவர்களின் மெய்நிகர் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

நாளை(மே 11) முதல் மே 15 வரை தினமும் மாலை 4.30 - 5 மணிக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் உரையாற்றுகிறார். அந்தவகையில், சத்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பூஜானியா ஷங்கராச்சார்யா விஜயேந்திர சரஸ்வதி, சோனல் மன்சிங், மோகன் பகவத் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

இந்த சொற்பொழிவுகளை மே 11 முதல் மே 15 வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை (facebook.com/VishwaSamvadKendraBharat) மற்றும் (youtube.com/VishwaSamvadKendraBharat)ஆகிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் பார்க்கலாம்.

முழு நிகழ்ச்சி விவரம்:

மே 11 - சத்குரு, புஜ்யா ஜெயின் முனிஸ்ரீ ப்ரமன்சாகர் 

மே 12 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீ ஆஸிம் பிரேம்(தொழில் முனைவோர்)

மே 13 - புஜானியா ஷங்கராச்சார்யா விஜயேந்திர சரஸ்வதி, ஜகத்குரு, காஞ்சி காமகோடி பீடம். சோனல் மன்சிங்.

மே 14 - ஆச்சார்யா வித்யாசாகர் ஜி மஹராஜ், புஜ்யா ஸ்ரீ மஹந்த் சாண்ட் ஜியான் தேவ் சிங்.

மே 15 - மோகன் பகவத்.
 

click me!