அதிர்ச்சி செய்தி... கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் உயிரிழப்பு?

By vinoth kumarFirst Published May 7, 2021, 5:22 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீது கொலை, பணம் பறிப்பு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சோட்டா  ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இந்தியா கொண்டு வந்ததும் உடனடியாக கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன் திகார் சிறையில் அடைக்கப்பட்டான். பத்திரிகையாளர் ஜோதிர்மோய் டே கொலை வழக்கில் நிழலுலக தாதா சோட்டா ராஜனுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், திகார் சிறையில் இருந்த சோட்டா ராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த மாதம் 26ம்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சோட்டா ராஜன் உயிரிழந்தாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதய நோய், நீரிழிவு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இதனை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இன்னும் அவர் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!