உலகிலேயே இது அதிகம்... கையை மீறிய கொரோனா... முழு ஊரடங்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியா?

Published : May 06, 2021, 01:31 PM IST
உலகிலேயே இது அதிகம்... கையை மீறிய கொரோனா... முழு  ஊரடங்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியா?

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4000ஐ நெருங்கி உள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4000ஐ நெருங்கி உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்த முதல் நாடு இந்தியா ஆகும். உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கொரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து 1,72,80,844 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,29,113பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 35,66,398 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 23,01,68 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொற்று வேகமாக பரவி வருவதால் மருத்துவ நிபுணர்கள் பலரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், இந்தியாவில் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்புள்ளதால் குறைந்தது 2 வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!