கதிகலங்க வைக்கும் ‘கொரோனா’... முன்னாள் மத்திய அமைச்சர் கோவிட் தொற்றுக்கு பலி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 06, 2021, 10:35 AM IST
கதிகலங்க வைக்கும் ‘கொரோனா’... முன்னாள் மத்திய அமைச்சர் கோவிட் தொற்றுக்கு பலி...!

சுருக்கம்

ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் நிறுவனர் தலைவரான அஜீத் சிங்கிற்கு கடந்த 20ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா 2வது அலைக்கு கடந்த சில நாட்களாகவே தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகனான அஜீத் சிங், மத்திய அமைச்சராக 4 முறை இருந்துள்ளார். 


ராஷ்ட்ரிய லோக் தல் கட்சியின் நிறுவனர் தலைவரான அஜீத் சிங்கிற்கு கடந்த 20ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

86 வயதாகும் அஜீத்சிங் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனா தொற்றால் முன்னாள் மத்திய அமைச்சர் மரணமடைந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!
என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்து கொடுக்கும் பிரதமர் மோடி!