#CORONABREAKING எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கி போயி கிடக்கும் இந்தியா.. கொரோனா பாதிப்பு குறைந்தது..!

Published : May 13, 2021, 10:58 AM ISTUpdated : May 13, 2021, 10:59 AM IST
#CORONABREAKING எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கி போயி கிடக்கும் இந்தியா.. கொரோனா பாதிப்பு குறைந்தது..!

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 4,120  பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 4,120  பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,62,727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2,37,03,665ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 3,52,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்தது.
தற்போது 37,10,525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,120 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தனர். இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,58,317ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 17, 72, 14,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

நேற்று மட்டும் 18,64,594 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், இதுவரை பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 30,94,48,585 ஆக அதிகரித்து உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!