3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற என் டி ஏ கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமராக நேரந்திர மோடி பதவியேற்றார். தொடர்ந்து நடைபெற்று முடிந்த 18வது மக்களவை கூட்டத்தொடரை அடுத்த பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், உத்தராகண்ட் மாநில ஆளுநர் குர்மித் சிங் உள்ளிட்டோர் கடந்த 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்களைத் தொடர்ந்து டெல்லியில் மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
Nainar Nagendran: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் ஆஜர்
இந்நிலையில், 5 நாள் பயனமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி டெல்லி சென்றார். இன்று காலை முதல் வேலையாக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ்பவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக மக்கள் சேவையில் பிரதமர மோடியின் அக்கறை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது