ராகுலின் சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு... ஏப்.20 அன்று தீர்ப்பு அளிக்கிறது சூரத் நீதிமன்றம்!!

By Narendran S  |  First Published Apr 13, 2023, 7:02 PM IST

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: இந்த ஆண்டில் சூப்பர் எல்-நினோ அபாயம்! காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Tap to resize

Latest Videos

இதை அடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை அடுத்து சிறை தண்டணைக்கு எதிராக ராகுல் காந்தி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ராகுல் காந்தியின் சார்பாக, நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா மற்றும் வழக்கறிஞர்கள் கிரிட் பன்வாலா, தரன்னும் சீமா ஆகியோர் ஆஜராகினர்.

இதையும் படிங்க: இன்று வெளியாகிறது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்? பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராகியிருந்தார். வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஏப்.20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

click me!