கொல்கத்தாவில் முதல் முறையாக ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில்!

By SG Balan  |  First Published Apr 13, 2023, 3:07 PM IST

காலை 11.45 மணிக்கு மெட்ரோ ரயில் முதல் முறையாக 520 மீட்டம் நீளம் கொண்ட ஹூக்ளி சுரங்கப்பாதையைக் கடந்து சென்றது.


நாட்டிலேயே முதல் முறையாக கல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றின் அடியில் சுரங்கப்பாதையில் பயணிக்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மெட்ரோ ரயில் செல்வதற்காக ஆற்றின் அடியில் 520 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஹூக்ளி ஆற்றுக்குக் கீழே உள்ள இந்த சுரங்கப்பாதை வழியாக புதன்கிழமை மெட்ரோ ரயில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிந்தது. காலை 11.45 மணிக்கு முதல் முறையாக மெட்ரோ ரயில் ஹூக்ளி சுரங்கப்பாதையைக் கடந்தது. இந்த ஐந்து நிமிடப் பயணம் கிழக்கு – மேற்கு மெட்ரோ ரயில்வேயில் வரலாற்றில் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே இதேபோல ஆற்றுக்குக் கீழ் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள நகரங்கள் சில உள்ளனர். லண்டன் (தேம்ஸ் நதி), பாரிஸ் (சீன்), நியூயார்க் (ஹட்சன்), ஷாங்காய் (ஹுவாங்பு) மற்றும் கெய்ரோ (நைல்) ஆகிய நகரங்களி ஆற்றின் கீழ் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மெட்ரோ ரயில்வேயின் பொது மேலாளர் பி உதய் குமார் ரெட்டி கூறுகையில், “இந்திய ரயில்வேக்கு மட்டுமல்ல, கல்கத்தாவுக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய நாள்” என்றார். “ரயில் ஹூக்ளி நதியைக் கடந்து கிழக்கு-மேற்கு மெட்ரோவின் ஹவுரா நிலையத்தை அடைந்து. அது 33 மீட்டர் ஆழத்தில் உள்ள நாட்டின் ஆழமான மெட்ரோ நிலையமாகும்.” எனவும் அவர் கூறினார்.

பின்னர், மற்றொரு ரயில் எஸ்பிளனேட் முதல் ஹவுரா வரை ஆற்றுக்குக் கீழ் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் பயணித்தது.

click me!