
ஊனம் காரணமாக தட்டில் உணவு இருந்தும் கைகள் இல்லாததால் உண்ணமுடியாமல் தவித்தார் சுல்தான். இதைக் கண்ட ஒரு ஹிந்துவான ஜிந்து தேகா, மாற்றுத்திறனாளி சுல்தானுக்கு தன் கையால் உணவு ஊட்டிவிட்டார்.
இந்த காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த மனிதாபிமான செயல் மற்றும் ரமலான் மாதத்தின் உணர்வோடு ஒத்துப்போகும் மனிதப் பிணைப்பு குறித்து மக்கள் இதயப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்ததால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ரமலானின் போது நோன்பு நோற்று இருக்கும் முஸ்லிமுக்கு செஹ்ரி நேரம் (விடியலுக்கு முந்தைய உணவு) வந்தது. அந்த நேரத்தில் தான் சுல்தான் தனது தட்டில் சோறுடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது அசௌகரியத்தை உணர்ந்த ஜிந்து தேகா, சுல்தானை மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்துச் சென்று, தன் கைகளால் அவருக்கு உணவளித்தார்.
இந்த உணர்ச்சிகரமான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.
ஜிந்து தேகா, சர்தேபாரியை சேர்ந்தவர் மற்றும் ரெயின்ட்ராப்ஸ் முன்முயற்சி அஸ்ஸாமின் தன்னார்வ தொண்டராக உள்ளார். இது கவுகாத்தி மருத்துவக் கல்லூரியின் உள்ளே உள்ள வளாகத்தில் ரமலானின் போது நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பிறருக்கு இலவச செஹ்ரி உணவை வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பு (NGO) ஆகும்.
இதுகுறித்து ரெயின்ட்ராப்ஸ் முன்முயற்சி அசாம் குழுவின் அலுவலக பொறுப்பாளர் அபித் ஆசாத் கூறுகையில், "இந்த நாள் எங்களுக்கு ஒரு சிறப்பு நாளாக மாறியது. ஏனென்றால் ஜிந்து தேகா, சுல்தான் என்ற உடல் ஊனமுற்ற மனிதருக்கு சோறு ஊட்டியுள்ளார்."
எங்கள் உணவு விநியோகத்தில் மனிதநேயம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் அழகான தருணத்தை நாங்கள் கண்கிறோம் என்றார்.
ரெயின்ட்ராப்ஸ் முன்முயற்சி அசாம் குழுவின் உறுப்பினர்கள் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உணவு சமைத்து விநியோகித்து வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், குவஹாத்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மத வேறுபாடின்றி உணவு தேவைப்படும் அனைவருக்கும் அவர்கள் உணவு பரிமாறி வருகின்றனர்.
அசாதுதீன் ஒவைசிக்கு, இந்திய முஸ்லீம் ஆகிய நான் எழுதிக்கொள்வது...!